search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பேஸ்புக் நிறுவனம்"

    ‘பேஸ்புக்’ நிறுவனத்தின் ‘வொர்க் பிளேஸ்’ என்னும் நிறுவன தகவல்தொடர்பு பிரிவின் தலைவராக கரன்தீப் ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார். #Facebook #KarandeepAnand
    நியூயார்க்:

    ‘பேஸ்புக்’ நிறுவனத்தில் 4 ஆண்டுகளுக்கு முன்பு சேர்ந்து அதிகாரியாக உள்ளவர் கரன்தீப் ஆனந்த் இந்தியர். இவர் 15 ஆண்டுகள் ‘மைக்ரோசாப்ட்’ நிறுவனத்தில் பணியாற்றி விட்டு, ‘பேஸ்புக்’ நிறுவனத்தில் சேர்ந்தவர் ஆவார். இவர் ‘பேஸ்புக்’ நிறுவனத்தில் மார்க்கெட் பிளேஸ், ஆடியன்ஸ் நெட்வொர்க், ஆட் சொல்யூசன்ஸ் உள்ளிட்ட பிரிவுகளில் பணியாற்றியவர்.

    இந்த நிலையில் ‘பேஸ்புக்’ நிறுவனத்தின் ‘வொர்க் பிளேஸ்’ என்னும் நிறுவன தகவல்தொடர்பு பிரிவின் தலைவர் ஆக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் சாப்ட்வேர் என்னும் மென்பொருள் தயாரிப்பாளர்கள், என்ஜினீயர்கள், ஆராய்ச்சியாளர்கள், தரவு (டேட்டா) என்ஜினீயர்கள் அடங்கிய குழுவுக்கு தலைமை வகிப்பார். ‘வொர்க் பிளேஸ்’ தகவல் தொடர்பு பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பதற்கு கரன் தீப் ஆனந்த் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், “உலகமெங்கும் உள்ள நிறுவனங்களுக்கு வொர்க்பிளேஸ்சை கொண்டு செல்வதில் நான் ஒரு அங்கமாக இருக்கப்போகிறேன் என்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்” என கூறி உள்ளார்.

    கரன்தீப் ஆனந்த் வொர்க்பிளேஸ் பிரிவில் தலைமை ஏற்பது குறித்து அதன் செய்தி தொடர்பாளர் கூறுகையில், “கரன்தீப் வொர்க்பிளேஸ் தலைமை பதவிக்கு வருவதில் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளோம். அவர் நுகர்வோர் மற்றும் நிறுவனங்கள் பின்னணியில் மிகுந்த அனுபவம் பெற்றிருப்பவர். அவர் எங்களுடன் சேர்வது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது” என குறிப்பிட்டார். #Facebook #KarandeepAnand
    வாடிக்கையாளர்களின் தகவல்களை திருடிய விவகாரம் தொடர்பாக, பேஸ்புக் நிறுவனத்துக்கு இங்கிலாந்து தகவல் ஆணையம் 4.70 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. #Facebook
    லண்டன்:

    கடந்த 2007-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் பயனாளர்களின் தகவல்களை அவர்களின் அனுமதியின்றி பயன்படுத்தியதாக பேஸ்புக் நிறுவனத்தின் மீது குற்றம் சாட்டப்பட்டது.

    அமெரிக்காவை சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா என்னும் தேர்தல் பிரசார நிறுவனம் பேஸ்புக் பயனாளர்களின் தகவல்களை தேர்தல் பிரசாரத்தில் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக பேஸ்புக் நிறுவனத்தின் மீது இங்கிலாந்து தகவல் ஆணையத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. 

    இந்நிலையில், வாடிக்கையாளர்களின் தகவல்களை திருடிய விவகாரம் தொடர்பாக பேஸ்புக் நிறுவனத்துக்கு இங்கிலாந்து தகவல் ஆணையம் 4.70 கோடி ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. 



    இதுதொடர்பாக இங்கிலாந்து தகவல் ஆணையம் அளித்துள்ள தீர்ப்பில், வாடிக்கையாளர்களின் தகவலை அவர்கள் அனுமதியின்றி பயன்படுத்திய குற்றச்சாட்டில் பேஸ்புக் நிறுவனத்திற்கு இங்கிலாந்து தகவல் பயன்பாட்டுச் சட்ட விதிகளின் படி அதிகபட்ச அளவாக 4.70 கோடி ரூபாய் அபராதமாக விதிக்கப்படுகிறது.

    பேஸ்புக் நிறுவனத்தில் பயன்படுத்தப்படும் பல்வேறு செயல்களின் மூலமாக சேகரிக்கப்படும் தகவல்களானது, பயனாளர்களின் அனுமதியின்றி தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தபட்டுள்ளது. இதன்மூலம் பயனாளர்களின் அந்தரங்கத் தகவல்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் இருந்து பேஸ்புக் நிறுவனம் தவறியுள்ளது. இந்த விவகாரம் பெரும் சர்சையைக் கிளப்பிய பின்னரும் 2018-ஆம் ஆண்டுவரை கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனத்தின் மூல நிறுவனமான எஸ்.சி.எல் நிறுவனம் பேஸ்புக் தளத்திலிருந்து நீக்கப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது என தெரிவித்துள்ளது. #Facebook
    வாக்குப்பதிவுக்கு 48 மணி நேரத்துக்கு முன் பேஸ்புக்கில் தேர்தல் தொடர்பான விளம்பரங்களை ரத்து செய்ய வேண்டும் என ‘பேஸ்புக்’ நிறுவனத்துக்கு தேர்தல் கமிஷன் கோரிக்கை விடுத்தது. #ElectionCommission #Facebook
    புதுடெல்லி:

    மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 126-வது பிரிவின்படி, வாக்குப்பதிவுக்கு முந்தைய 48 மணி நேரத்தில் தொலைக்காட்சி உள்ளிட்ட கருவிகள் மூலம் தேர்தல் தொடர்பான விளம்பரங்கள் வெளியிட தடை செய்யப்பட்டு உள்ளது. இதுபோன்ற விளம்பரங்களை 48 மணி நேரத்துக்கு முன்னரே நிறுத்த வேண்டும்.

    இந்த சட்டப்பிரிவு குறித்து ஆராய்வதற்காக தேர்தல் கமிஷன் அமைத்த சிறப்பு குழுவின் கூட்டம் சமீபத்தில் நடந்தது. இதில் ஊடக அமைப்புகளின் பிரதிநிதிகள், தகவல் தொழில்நுட்ப அமைச்சக அதிகாரிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதில் பேஸ்புக் சமூக வலைத்தளத்தின் பிரதிநிதியும் பங்கேற்றார்.



    அப்போது வாக்குப்பதிவுக்கு 48 மணி நேரத்துக்கு முன் பேஸ்புக்கில் தேர்தல் தொடர்பான விளம்பரங்களை ரத்து செய்ய வேண்டும் என ‘பேஸ்புக்’ நிறுவனத்துக்கு தேர்தல் கமிஷன் கோரிக்கை விடுத்தது. இதற்கு எந்தவித குறிப்பட்ட பதிலும் இதுவரை தெரிவிக்காத பேஸ்புக் நிறுவனம், அது குறித்து பரிசீலித்து வருவதாக கூறியுள்ளது.

    எனினும் தேர்தல் சட்டங்கள் மீறப்பட்டது தொடர்பான புகார்களை தெரிவிக்க பேஸ்புக்கில் சிறப்பு வசதி ஏற்படுத்தப்படும் என்று கூறிய பேஸ்புக் பிரதிநிதி, அதில் சட்டமீறல் கண்டறியப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.  #ElectionCommission #Facebook #Tamilnews 
    பேஸ்புக் நிறுவனம் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 58 கோடி போலி முகநூல் கணக்குகளை நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளது. #Facebook #fakeaccounts
    கலிபோர்னியா:

    சமூக வலைத்தளமான ‘பேஸ்புக்’ எனப்படும் முகநூலை உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகிறார்கள். இதற்கிடையே, முகநூல் தொடர்பாக இங்கிலாந்தில் பெரும் சர்ச்சை வெடித்தது. முகநூல் பயன்படுத்தும் சுமார் 5 கோடி பேரைப் பற்றிய விவரங்கள் ஒரு ‘ஆப்’ மூலம் திருடப்பட்டு, கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா என்ற அரசியல் பிரசார நிறுவனத்திடம் பகிர்ந்து கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த விவரங்கள் அரசியல் பிரசாரத்துக்கு பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்பட்டது.

    இதையடுத்து, பேஸ்புக் வலைத்தளத்தில் வன்முறைகளை தூண்டும், ஆபாச படங்கள் மற்றும் பயங்கரவாத கருத்துகளை வெளியிடும் முகநூல் கணக்குகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என பேஸ்புக் நிறுவனம் அறிவித்திருந்தது. மேலும், போலி முகநூல் கணக்குகள் முடக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தது.

    இந்நிலையில், கடந்த 3 மாதங்களில் மட்டும் 58.3 கோடி போலி முகநூல் கணக்குகள் மூடப்பட்டதாக தெரிவித்துள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் 3.4 மில்லியன் தவறான புகைப்படங்கள் நீக்கப்பட்டன. #Facebook #fakeaccounts
    ×